பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையால் சாமந்தி பூ அறுவடை தொடக்கம்

Added : ஜன 13, 2020
Advertisement

வீரபாண்டி: பொங்கல் பண்டிகையால், சாமந்தி பூ அறுவடை தொடங்கியது. வீரபாண்டி வட்டாரம், புத்தூர் அக்ரஹாரம், உத்தமசோழபுரம், அரியாம்பாளையம், பெருமாம்பட்டி பகுதிகளில், ஆண்டுதோறும், 100 ஏக்கருக்கு குறையாமல், சாமந்தி பயிரிட்டு வருகின்றனர். சில ஆண்டாக, நாட்டு ரக மஞ்சள் சாமந்தி செடிகளை பயிரிடாமல், வெள்ளை, ஊதா, ஆரஞ்சு வண்ணங்களில் பூக்கும் ஒட்டுரக செடிகளை பயிரிட்டு வருகின்றனர். கடந்தாண்டு ஆயுதபூஜைக்கு பின் தான், சாமந்தி செடிகள் நடவு செய்யப்பட்டன. இதனால், இரு மாதம் தாமதமாக, தற்போது பூக்கள் பூத்துள்ளன. இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: மூன்றாண்டாக போதிய மழையின்றி மகசூல் குறைந்தது, சீசன் தவறியது உள்ளிட்ட காரணங்களால், சாமந்தி பயிரிட்ட விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். நடப்பாண்டு, மழை பெய்து எதிர்பார்த்த மகசூல் கிடைத்தும், உரிய விலையின்றி, கடந்த வாரம், ஒரு கிலோ, 20, 30 ரூபாய்க்கு மட்டும் விற்பனையானது. ஒரு கிலோ பூ விளைவிக்க, குறைந்தபட்சம், 50 ரூபாய் வரை செலவாகிறது. அதற்கும் குறைந்த விலை கிடைப்பதால், ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. தற்போது, போகி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று(நேற்று முன்தினம்) முதல், ஒரு கிலோ பூ, ரகத்துக்கேற்ப, 70 முதல், 100 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. மேலும் பூக்கள் தேவைப்படும் என்பதால், 100 ரூபாய்க்கு மேல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X