பொது செய்தி

தமிழ்நாடு

போனஸ் தொகையை சுருட்ட முயற்சி: முதல்வருக்கு உற்பத்தியாளர் புகார்

Added : ஜன 13, 2020
Advertisement

கெங்கவல்லி: கூடமலை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், 'போனஸ்' தொகையை, உற்பத்தியாளர்களிடம் வழங்காமல், தலைவர் உள்ளிட்டோர் தன்னிச்சையாக செலவு செய்ய முயற்சிப்பதாக, தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
கெங்கவல்லி அருகே, கூடமலை, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், 130 உறுப்பினர் உள்ளனர். தினமும், 4,200 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 2019ல், பால் கொள்முதல் செய்ததற்கான, 'போனஸ்' தொகையாக, 6.70 லட்சம் ரூபாயை, ஆவின் நிர்வாகம் வழங்கியது. அதில், தலா, 50 சதவீதம், கூட்டுறவு சங்கம், உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்நிலையில், அதன் உறுப்பினர் அ.ராஜேந்திரன், நேற்று முன்தினம், தமிழக முதல்வர் பழனிசாமி, சேலம் கலெக்டர் ராமனுக்கு அனுப்பிய புகார் மனு: கூடமலை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், 15 ஆண்டுக்கு மேலாக, தினமும், 200 முதல் 250 லிட்டர் பால் ஊற்றி வருகிறேன். இங்கு, அரசு மூலம் வழங்கப்பட்ட போனஸ் தொகையை வழங்காமல், உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர். உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வழங்கும் தொகையை, சங்க நிர்வாகக்குழு தன்னிச்சையாக எடுக்க முயற்சிப்பது குறித்து, உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, கூடமலை கூட்டுறவு சங்க செயலர் ராஜேந்திரன் கூறுகையில், ''கூட்டுறவு சங்கத்துக்கு, 6.70 லட்சம் ரூபாய் போனஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில், 50 சதவீதமான, 3.35 லட்சம் ரூபாய், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர் ராஜேந்திரன், தாமதமாக தொகையை வாங்கிக் கொண்டார். சங்கத்துக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் புகார் தெரிவித்துள்ளார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X