பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல் விழாவில் தூய்மைக்காவலருக்கு பாத பூஜை

Added : ஜன 13, 2020
Advertisement

ஆத்தூர்: சமத்துவ பொங்கல் விழாவில், தூய்மைக்காவலருக்கு புடவை வழங்கி, பாத பூஜை செய்து, தலைமையாசிரியர் வழிபட்டார்.
கெங்கவல்லி அருகே, கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில், புகையில்லா போகி விழா, நேற்று கொண்டாடப்பட்டது. வி.ஏ.ஓ., துரை தலைமை வகித்தார். அதில், ஊராட்சியில் தூய்மைப்பணியில் ஈடுபடும், 10 பேருக்கு, தலைமையாசிரியர் செல்வம், புடவைகளை பரிசாக கொடுத்து, அவர்களது பாத பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து, பள்ளி மேலாண் குழுவினர், வறுமை ஒழிப்பு சங்கத்தினர், ஊர்மக்கள் இணைந்து, பொங்கல் வைத்து, பசுவுக்கு பூஜை செய்து கொண்டாடினர். மாணவ, மாணவியர், வேட்டி, சேலையுடன் பங்கேற்றனர். மேலும், மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினர். பின், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி, விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மாணவர்கள், மக்கள், முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X