பொது செய்தி

தமிழ்நாடு

1,580 சத்துணவு பணியாளருக்கு 14 சதவீத பங்கு ஈவுத்தொகை வழங்கல்

Added : ஜன 13, 2020
Advertisement

சேலம்: சேலம் மாவட்ட சத்துணவு அமைப்பாளர், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க, 2018 - 19 பேரவை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அதில், உறுப்பினர்களுக்கு கடன்தொகை மூன்று லட்சத்திலிருந்து, ஏழு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குதல்; கடன் தொகையில், முதலீடுக்கு பிடித்தம் செய்யும், 10 சதவீத தொகையை, 5 ஆக குறைத்தல்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உறுப்பினர்களுக்கு, பங்கு ஈவுத்தொகை, 14 சதவீதம் வழங்குதல்; கடன் பெறும் உறுப்பினர்களுக்கு காப்பீடு செய்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நேற்று, சங்க அலுவலகத்தில், 1,580 உறுப்பினருக்கு, 14 சதவீத பங்கு ஈவுத்தொகையுடன், இனிப்பு, காரம் வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் தங்கவேலன் கூறுகையில், ''தவறுகளை தடுக்க, உறுப்பினர் வங்கி கணக்கில், ஈவுத்தொகை செலுத்தப்பட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X