பொது செய்தி

தமிழ்நாடு

சங்ககிரி செங்கரும்பு கூடுதல் 'இனிப்பு': விவசாயிகள் முகத்தில் பொங்கிய மலர்ச்சி

Added : ஜன 13, 2020
Advertisement

சங்ககிரி: சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில், செங்கரும்பு அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதேநேரம், நல்ல விளைச்சல், அதிக லாபத்துக்கு விற்கப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சங்ககிரி ஒன்றியம், அரசிராமணி செட்டிப்பட்டி, தேவூர், குள்ளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, வட்டராம்பாளையம், காவேரிபட்டி, கல்வடங்கம், கோனேரிப்பட்டி ஆகிய பகுதிகளில், விவசாயிகள் நடப்பாண்டு, செங்கரும்பை, 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்தனர். இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுக்கு, அரசு நேரடியாக விவசாயிகளிடம், செங்கரும்பை கொள்முதல் செய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, வியாபாரிகளும் அதிகளவில் வந்து வாங்கிச்செல்கின்றனர். அதற்கேற்ப, நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் முகத்தில் மலர்ச்சி தென்பட்டது. இதுகுறித்து, குள்ளம்பட்டி செங்கரும்பு விவசாயி கோபால் கூறியதாவது: கடந்தாண்டை விட, நடப்பாண்டு மேட்டூர் அணையிலிருந்து கிழக்குக்கரை வாய்க்கால் பாசனத்தில், முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டதால், செங்கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு, நல்ல விளைச்சல் கொடுத்துள்ளது. இதனால், வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கிச்செல்கின்றனர். 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, 400 முதல், 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

வெளிமாவட்டங்களிலிருந்து...: பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, நெடுங்குளம், சிலுவம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில், கரும்பு அறுவடை செய்யும் பணி, ஒரு வாரமாக நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்குவதால், விற்பனை, விலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து, பூலாம்பட்டி விவசாயி முத்துசாமி கூறுகையில், ''ஒரு முழு கரும்பு, 13 ரூபாயிலிருந்து, 20 ரூபாய் வரை, தரத்தை பொறுத்து விற்பனையாகிறது. அதனால், முதலீடுக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது,'' என்றறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X