சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'துணைத்தலைவரே தேவையில்லை': வீட்டை முற்றுகையிட்டு மக்கள் கோஷம்

Added : ஜன 13, 2020
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர், கொத்தாம்பாடி ஊராட்சியில், ஒன்பது வார்டுகள் உள்ளன. நேற்று முன்தினம், அதன் துணைத்தலைவர் பதவி தேர்தல் நடந்தது. அதில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இளையராஜா வேட்பு மனு வழங்கினார். தொடர்ந்து, அவர் உள்ளிட்ட ஆதரவாளர்கள், அதே கட்சியில் போட்டியிடவிருந்த நித்யா சுரேஷ், அவரது ஆதரவு கவுன்சிலர்களை, ஊராட்சி அலுவலக வளாகத்தில் அனுமதிக்காமல், உருட்டுக்கட்டை, கம்பிகளால் தாக்கி ரகளையில் ஈடுபட்டனர். இதில், போலீஸ் ஏட்டு சக்திவேல், அ.தி.மு.க., ஊராட்சி தலைவர் ராஜா உள்பட ஆறு பேர் காயமடைந்தனர். பின், இளைய ராஜாவின் வேட்பு மனுவை ஏற்று, தேர்தல் அலுவலர் பரிமளா, போட்டியின்றி துணைத்தலைவராக தேர்வு செய்ததாக, அறிவிப்பு பலகையில் ஒட்டினார். இதனால், 100க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று, கொத்தாம்பாடி, அழகாபுரம் காலனியிலுள்ள துணைத்தலைவர் இளையராஜாவின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது, 'ஊராட்சிக்கு துணைத் தலைவர் தேவையில்லை. ரவுடி கும்பலுடன் அராஜகத்தில் ஈடுபட்டு, துணைத் தலைவராக தேர்வு செய்து கொண்ட இளையராஜாவை, ஊருக்குள் விடமாட்டோம்' என, கோஷம் எழுப்பினர். ஆத்தூர் ஊரகம், டவுன் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, தேர்தல் குறித்து, கலெக்டர், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மூலம் தீர்வு காண அறிவுறுத்தினர். பின், மக்கள் கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X