சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பீர் பாட்டிலால் தாக்கிய ரவுடிக்கு காப்பு

Added : ஜன 13, 2020
Advertisement

சேலம்: சேலம், மணியனூர், காத்தாயம்மாள் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 29; வெள்ளிப்பட்டறை நடத்துகிறார். இவரது வீட்டிலிருந்து, கடந்த வாரம், மோட்டார், சிலிண்டர் திருடுபோனது. இதுகுறித்து, அவரது புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்தனர். அதில், மணியனூரைச் சேர்ந்த சுப்ரமணி மகனான ரவுடி வைத்தி, 21, மீது சந்தேகப்பட்டு, போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு, கார்த்திக், சேலம் அரசு சட்ட கல்லூரியின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்து, வைத்தி தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து, பீர் பாட்டிலால், கார்த்திக் தலையில் தாக்கினார். அதில், படுகாயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார், வைத்தியை கைது செய்தனர். அவர் மீது, திருட்டு, வழிப்பறி உள்பட, 17 வழக்கு கள் நிலுவையில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X