தமிழ்நாடு

மாவட்ட பதவிகளை பறிக்கும் புறநகர் மாவட்டம்: மாநகர மாவட்ட அ.தி.மு.க.,வினர் ஆவேசம்

Added : ஜன 13, 2020
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட அளவிலான பெரிய பதவிகள் அனைத்தையும், புறநகர் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே வழங்கியதால், மாநகர மாவட்ட நிர்வாகிகள் கொதிப்பு அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், மாநகர மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக எம்.எல்.ஏ., ராமலிங்கம், புறநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் கருப்பணன் உள்ளனர். புறநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட கோபியில், அமைச்சர் செங்கோட்டையனும் உள்ளார். மாநகர மாவட்டத்தில், ஈரோடு கிழக்கில் எம்.எல்.ஏ., தென்னரசு, மேற்கில் எம்.எல்.ஏ., ராமலிங்கம், மொடக்குறிச்சியில் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி உள்ளனர். இம்மூவர் இருந்தாலும், அமைச்சர்கள் மற்றும் புறநகர மாவட்ட நிர்வாகிகளை மீறி, இவர்களால் செயல்பட முடியவில்லை. லோக்சபா தேர்தலில், ஈரோடு மாவட்ட சட்டசபை தொகுதிகளை அதிகம் கொண்ட ஈரோடு மற்றும் திருப்பூர் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் காங்கேயத்தை சேர்ந்த வெங்கு மணிமாறனுக்கும், திருப்பூர் முன்னாள் அமைச்சர் ஆனந்தனுக்கும் வாய்ப்பு வழங்கி, தோல்வியை தழுவினர். கூட்டுறவு தேர்தலிலும், மாவட்ட அளவில் முக்கிய பதவிகளை, புறநகர் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது. அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளரான, கோபி காளியப்பனுக்கு ஈரோடு ஆவின் சேர்மன் பதவி, கருப்பணன் ஆதரவாளரான பவானி கிருஷ்ணராஜூக்கு, ஈரோடு மத்திய மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், அமைச்சர் பதவிக்கு இணையான மாவட்ட பஞ்., தலைவர் மற்றும், துணை தலைவர் பதவியும் புறநகரின் முடிவுக்கே சென்றது. அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி மனைவிக்கு தலைவர் பதவி, கூட்டணி கட்சியை சேர்ந்த பா.ம.க.,வுக்கு துணை தலைவர் பதவியும் வழங்கப்பட்டு விட்டது. இப்பதவிகளுக்கு, மாநகர மாவட்டத்தில் கவுன்சிலர்கள் இருந்தும், மாவட்ட துணை தலைவர் பதவி கூட வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது நியாயமா? முறையா? அ.தி.மு.க., நிர்வாகிகள் மேலும் கூறியதாவது: மாநகர மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., தென்னரசு போன்றோர், எந்த பதவியாக இருந்தாலும், தனது மகன், மருமகன் அல்லது உறவினர்களுக்கே கேட்கின்றனர். வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை தேர்வு செய்து தருவதற்கு பதில், கோஷ்டி பூசல் மேலும் வலுப்பெறும் வகையில் தேர்வு செய்கின்றனர். இதை தவிர்க்கவே, லோக்சபா தேர்தலில், காங்கேயத்தை சேர்ந்த வெங்கு மணிமாறனுக்கு வாய்ப்பு தந்தனர். தாங்கள் கேட்ட நபருக்கு இடம் கிடைக்காததால், அவரை மாநகர மாவட்ட நிர்வாகிகள் தோற்கடித்தனர். அந்த அளவுக்கு கடும் கோஷ்டி பூசல் உள்ளதால், புறநகர் பகுதி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மாநகர மாவட்டத்தில் மூன்று எம்.எல்.ஏ.,க்களும் தனி கோஷ்டியாகவும், முன்னாள் மாநகராட்சி துணை மேயர் பழனிசாமி, பகுதி செயலாளர் பெரியார் நகர் மனோகரன் கோஷ்டி உள்ளதாலும், இதை தீர்க்க முடியாததாலும், புறநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X