பொது செய்தி

தமிழ்நாடு

கோலப்பொடி முதல் மாட்டு கயிறு வரை பொங்கல் பொருட்கள் விற்பனை ஜோர்

Added : ஜன 13, 2020
Share
Advertisement

புளியம்பட்டி: பொங்கலை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டியில், பூஜை பொருட்களின் விற்பனை களை கட்டியது.
போகி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அடுத்து பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என, வரிசையாக நான்கு நாட்கள் கொண்டாட்டத்திற்கு கிராமப்புறங்களில், மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதையொட்டி, புன்செய்புளியம்பட்டி பகுதியில் பொங்கல் வியாபாரம் களைகட்ட துவங்கியுள்ளது. இதற்காக, பஸ் ஸ்டாண்ட், திரு.வி.க., கார்னர், பவானிசாகர் சாலை பகுதிகளில், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, வாழைக்கன்று, கரும்பு, மாவிலை, பூமாலை, பூளை பூ, அரசாணிக்காய், அவரை உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் நாளில், வாசலில் வண்ணக் கோலமிடுவதை, பெண்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பல நிறங்களில் கோல மாவு மற்றும் கோலக்கட்டி விற்பனைக்காக வைக்கப்பட்டது. 100 கிராம் கோல மாவு, 15 முதல், 20 ரூபாய் வரை விற்கப்பட்டது. கலர் பவுடர்கள் ஒரு பாக்கெட், 10 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை விற்றது.

சங்ககிரி கரும்பு: சேலம் மாவட்டம் சங்ககிரி, வைகுந்தம் பகுதிகளில் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, சந்தையில் விற்பனைக்காக குவிக்கப்பட்டது. மொத்தமாக, சில்லரையாக விற்பனை செய்யப்பட்டது. 'ஒரு ஜோடி கரும்பு, 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். எங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு, வருமானம் கிடைக்கும். சீசனுக்கு மட்டும் கரும்பு விற்பனை செய்கிறேன்,' என கரும்பு வியாபாரி சுரேஷ் தெரிவித்தார்.

கலர் கலராக கயிறு: மாட்டு பொங்கலன்று, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கழுத்தில் மணி கட்டி, மாலை அணிவித்து, அலங்காரம் செய்து, பொங்கல் படையலிட்டு மாடுகளுக்கு வழங்குவர். அப்போது கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறுகளை புதியதாக கட்டுவர். இதற்காக சந்தையில், மாட்டு கயிறு, 10 முதல், 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சங்கராந்தி பொங்கலுக்கு பயன்படுத்தும், மொச்சை அவரை, அரசாணி காய்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சந்தைக்கும் வரத்து குறைவாகவே இருந்தது. திண்டுக்கல் மற்றும் சத்தி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ அரசாணிக்காய், 20 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை விலைபோனது. மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றதால், விற்பனை களை கட்டியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X