தீயணைப்பு வீரர்களுக்கு அடுக்குமாடி வீடு தயார்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு வீரர்களுக்கு அடுக்குமாடி வீடு தயார்!

Added : ஜன 13, 2020

ஈரோடு: ஈரோடு தீயணைப்பு வீரர்களுக்கு, 1.87 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, அடுக்குமாடி குடியிருப்பு பணி முடிந்து, திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. ஈரோடு, காந்திஜி ரோட்டில் மாவட்ட தலைமை தீயணைப்பு நிலையம் உள்ளது. நிலைய வளாகத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர், உதவி தீயணைப்பு அலுவலர் அலுவலகங்கள் உள்ளன. ஈரோடு தீயணைப்பு வீரர்களுக்கு (பயர் மேன்), தீயணைப்பு நிலையத்தின் பின்புறமே குடியிருப்புஒதுக்கப்பட்டுள்ளது. வீடுகள் பற்றாக்குறையால், தீயணைப்பு வீரர்கள் பிற குடியிருப்புகளில் தங்கி, சிரமப்பட நேரிடுகிறது. இதனால், தீயணைப்பு நிலையத்தின் பின்புறம், காலியிடத்தில் கூடுதல் கட்டடம் கட்டித்தர, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற அரசு, 12 குடியிருப்பு கொண்ட அடுக்குமாடி கட்ட, ஒரு கோடியே, 87 லட்சம் ரூபாயை ஒதுக்கியது. கடந்த, 2018 செப்.,27ல் கட்டுமான பணி துவங்கியது. கடந்த ஆண்டு ஜூலை, 25ல் நிறைவடைந்தது. மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, மின்வாரியம் சார்பில் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி தாமதமானது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது. மின் வினியோகம் செய்தால் போதும். திறப்பு விழாவுக்காக அடுக்குமாடி குடியிருப்பு காத்திருக்கிறது.
தீயணைப்பு துறையினர் கூறியதாவது: ஈரோடு தீயணைப்பு வீரர்களுக்கு, 12 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி முடிந்து, மின் இணைப்பு மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. அப்பணியும் ஓரிரு நாட்களில் நிறைவடைந்து விடும். திறப்பு விழாவுக்கு பின், பதிவு மூப்பு, பணி வரிசை பட்டியல் படி, வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X