மொடக்குறிச்சி சேர்மேனாக கணபதி துணை தலைவராக சுப்பிரமணி தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மொடக்குறிச்சி சேர்மேனாக கணபதி துணை தலைவராக சுப்பிரமணி தேர்வு

Added : ஜன 13, 2020

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியனில், 18 யூனியன் கவுன்சிலர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில், 11 இடங்களில் அ.தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.
முதல் வார்டில் பழனிசாமி, இரண்டாவது வார்டு பேபிகுமார், மூன்றாவது வார்டு கேசவன், நான்காவது வார்டு முருகானந்தம், ஆறாவது வார்டு கருணாகரன், ஏழாவது வார்டு சுப்பிரமணி, எட்டாவது வார்டு வெங்கிடுசாமி, ஒன்பதாவது வார்டு கணபதி, 11வது வார்டு ஜோதிமணி, 18வது வார்டு நடராஜ், 14வது வார்டு சுயேட்சை தனபாக்கியம் ஆகியோர், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க., தனி பெரும்பான்மை பெற்ற நிலையில், சேர்மேன், துணை தலைவர் பதவியை கைப்பற்றுவது எளிதானது. இதையடுத்து குளூரை சேர்ந்த ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் கணபதி, யூனியன் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக ஏழாவது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணி தேர்வானார். பதவியேற்பு விழாவில், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் கதிர்வேல், பா.ஜ. மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X