நடுங்க வைக்கும் குளிர்-பனி: கொடிவேரிக்கு குறைந்த சுற்றுலா பயணிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடுங்க வைக்கும் குளிர்-பனி: கொடிவேரிக்கு குறைந்த சுற்றுலா பயணிகள்

Added : ஜன 13, 2020
Share

கோபி: கடும் குளிரால், கொடிவேரி தடுப்பணைக்கு, சுற்றுலா பயணிகள் வருகை சரிந்தது. கோபி அருகே, கொடிவேரி தடுப்பணைக்கு, அருவியாக கொட்டும் தண்ணீரில் குளிக்க, சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். மார்கழி மாதம் பிறந்தது முதல், பனி மற்றும் குளிரால், சுற்றுலா பயணிகள் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. வழக்கமாக வார விடுமுறை நாட்களில், 2,000க்கும் அதிகமாக, பிறநாட்களில், 1,000க்கும் அதிகமாக பயணிகள் வருவர். நடப்பாண்டு கடும் குளிரால் வரத்து குறைந்துள்ளது. ஜன.,2ல்-826 பேர், 3ல்-856 பேர், 5ல்-1,891 பேர், 6ல்-546 பேர், 7ல்-540 பேர், 8ல்-860 பேர், 9ல்-329 பேர், 10ல்-452 பேர், 11ல்-647 பேரே வந்துள்ளனர். விடுமுறை நாளாக இருந்தாலும், நேற்று வழக்கத்தை விட மிக குறைந்த எண்ணிக்கையிலேயே, சுற்றுலா பயணிகள் வந்ததாக, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X