சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பதியை தாக்கி பன்றிகள் கடத்தல்

Added : ஜன 13, 2020
Advertisement

புதுக்கோட்டை: மணமேல்குடி அருகே, 80 பன்றிகளை லாரியில் கடத்திச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இடையாத்திமங்கலம் கண்மாய் பகுதியில், கொளக்குடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்,55, அவரது மனைவி கண்ணம்மாள்,45 ஆகியோர் பன்றிகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, பன்றிகளை பட்டியில் அடைத்து வைத்து விட்டு, இருவரும் தூங்கியுள்ளனர். அப்போது, லாரியில் அங்கு வந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த தம்பதியரை தாக்கி, கயிறால் கட்டி போட்டுவிட்டு, பட்டியில் அடைத்து வைத்திருந்த 80 பன்றிகளை, லாரியில் கடத்திச் சென்றனர். காலையில், அவ்வழியாக சென்றவர்கள் தம்பதியரை மீட்டு, மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மணமேல்குடி போலீசார், பன்றிகளை லாரியில் கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X