பொது செய்தி

தமிழ்நாடு

8ம் வகுப்பு தேர்வு எழுத 'ஆன்லைனில்' தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

Added : ஜன 13, 2020
Advertisement

தர்மபுரி: எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, தனித்தேர்வர்கள் அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என, தர்மபுரி தேர்வுத்துறை உதவி இயக்குனர் காவேரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.,2ல் துவங்கி, 9ல் முடிகிறது. இத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் வரும், 27 முதல், 31வரை, அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக, தர்மபுரி மாவட்டத்தில், இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பாலக்கோடு, அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வை, 2020 ஜன., 1ல், பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே தனித்தேர்வர்களாக தேர்வு எழுத முடியும். முதன்முறையாக தேர்வு எழுத விண்ணப்பிப்பவர்கள், தங்கள் பள்ளி கல்வி மாற்றுச்சான்றிதழ், நகல், அசல், பிறப்புச்சான்றிதழ் இவற்றில் ஒன்றை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே, 8ம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை, 04342 - 233812 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X