பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டமறித்தேர்வு 36 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுத ஏற்பாடு

Added : ஜன 13, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஜன., இறுதியில் நடக்கவுள்ள நாட்டமறித்தேர்வை, 36 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து மேம்படுத்த, பள்ளிகள் அளவில் 'நாட்டமறித் தேர்வு' நடத்தப்பட உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டம் மூலம், இத்தேர்வு நடத்தப் படுகிறது. இத்தேர்வை தமிழகம் முழுவதும், எட்டு லட்சத்து, 51 ஆயிரத்து, 999 மாணவர்கள், ஆங்கிலம், தமிழ் வழியில் கம்ப்யூட்டர் வாயிலாக ஆன்லைனில் எழுத உள்ளனர். இத்தேர்வில், 90 வினாக்களுக்கு, 90 நிமிடங்களில் மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். அதற்காக மாணவர்களுக்கு இணையதள பயிற்சிகள் வழங்க மாவட்ட வாரியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், இத்தேர்வை, 224 அரசு பள்ளிகளில், 36 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பிற்கு, ஜன., இறுதியிலும், ஒன்பதாம் வகுப்பிற்கு, பிப்.,யிலும் நடக்கிறது. இதையடுத்து, தேர்வை எவ்வாறு சிறப்பாக நடத்துவது, மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதற்காக, ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு, வழிகாட்டுதல் கூட்டம் தர்மபுரியில், சி.இ.ஓ., முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், குறு வளமைய ஒருங்கிணைப்பாளர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X