பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., பதவிக்கு எழுத்துத்தேர்வு

Added : ஜன 13, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், எஸ்.ஐ., பதவியிடங்களுக்கான எழுத்து தேர்வு, மொத்தம், நான்கு மையங்களில் நேற்று நடந்தது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 1,924 பேருக்கு தேர்வு எழுத அழைப்பு விடுத்திருந்த நிலையில், 1,458 பேர் மட்டும் எழுதினர். 466 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதே போன்று, தர்மபுரி பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 900 பேருக்கு தேர்வு எழுத அழைப்பு விடுத்திருந்த நிலையில், 739 பேர் மட்டும் எழுதினர். செந்தில் பப்ளிக் பள்ளியில், 2,100 பேருக்கு, 1,617 பேர் மட்டும் கலந்து கொண்டனர். குண்டல்பட்டி பச்சமுத்து பெண்கள் கலைக்கல்லூரியில், 1,013 பேருக்கு, 696 பேர் மட்டும் தேர்வு எழுதினர். தர்மபுரி மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக எஸ்.ஐ., எழுத்து தேர்வுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டிருந்த, 5,937 பேரில், 4,510 பேர் மட்டும் தேர்வில் கலந்து கொண்டனர். 1,427 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த போதும், தேர்வில் கலந்து கொள்ளவில்லை. தேர்வு மையங்களில் செய்துள்ள பாதுகாப்பு குறித்து, டி.ஐ.ஜி., பிரதீப்குமார், எஸ்.பி.,ராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.* கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் கல்லூரியில், எஸ்.ஐ., பதவிக்கான எழுத்துத்தேர்வு நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது. மதியம், 12:30 மணி வரை தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, ஆண்கள், 2,440 பேர், பெண்கள், 451 பேர் என மொத்தம், 2,891 பேர், எஸ்.ஐ., தேர்விற்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஆண்கள், 1,739 பேர், பெண்கள், 290 பேர் என மொத்தம், 2,029 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 862 பேர் தேர்விற்கு வரவில்லை. ஓசூர், அதியமான் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை, கடலோர பாதுகாப்பு குழு டி.ஐ.ஜி., பவானீஸ்வரி மற்றும் மாவட்ட எஸ்.பி., பண்டிகங்காதர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று (ஜன.,13) காலை, 10:00 மணிக்கு இரண்டாவது நாளாக, எஸ்.ஐ., எழுத்துத்தேர்வு நடக்கிறது. இதற்கு, 200 ஆண்கள், 50 பெண்கள் என மொத்தம், 250 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது, குறிப்பிடத்தக்கது.


* எஸ்.ஐ., பதவிக்கான எழுதுத்தேர்வு நேற்று, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவில், காட்பாடி வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில், 6,015 பேர் பங்கேற்றனர். காலை, 10:00 மணிக்கு தொடங்கி, 1:00 மணி வரை, தேர்வு நடந்தது. இதை வேலூர் சரக டி.ஐ.ஜி., காமினி பார்வையிட்டார். எஸ்.பி., பிரவேஷ்குமார் உடனிருந்தார். இன்று, காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கான தேர்வு நடக்க உள்ளது. இதில், 447 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X