பொது செய்தி

தமிழ்நாடு

தொப்பூர் அரசு பள்ளிக்கு ஐ.வி.டி.பி., சார்பில் ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள 'டிவி' நன்கொடை

Added : ஜன 13, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஏராளமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்குள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால், அரசு பள்ளிகளில் ஒரு முன்மாதிரி பள்ளியாக இப்பள்ளி செயல்படுகிறது. 10 மற்றும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், 96 சதவீத தேர்ச்சி இப்பள்ளி பெற்று வருகிறது. இப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி, ஸ்மார்ட் வகுப்பறை, டெஸ்க், பெஞ்ச் போன்றவை, ஐ.வி.டி.பி., மூலம் வழங்கப்பட்டுள்ளன. வகுப்பறைகளுக்கு பாடம் நடத்த ஏதுவாக, எல்.இ.டி., 'டிவி' வேண்டுமென பள்ளி தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ஆறு எல்.இ.டி., 'டிவி'க்கள், ஐ.வி.டி.பி., மூலம் வழங்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.2.04 லட்சமாகும். மேலும், மைக் வைக்க ஏதுவான போடியம் ஸ்டான்ட், 9,000 மதிப்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய, ஐ.வி.டி.பி., தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், இப்பள்ளிக்கு பல்வேறு பணிகளுக்காக, ஐ.வி.டி.பி., சார்பில், 3.90 லட்சம் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் முனிமாதன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X