பொது செய்தி

தமிழ்நாடு

அரையாண்டு தேர்வு தேர்ச்சி சதவீத ஆய்வு கூட்டம்

Added : ஜன 13, 2020
Advertisement

தர்மபுரி: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வின் தேர்ச்சி சதவீதம் குறித்த ஆய்வு கூட்டம் தர்மபுரியில் நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சி.இ.ஓ., முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், அரையாண்டு தேர்வின் தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எந்த மாணவர், எந்த பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தவாறு, அம்மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டும். சிறப்பு வகுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். இதேபோல் மெல்ல கற்கும் மாணவர்கள் மீது மிகுந்த அக்கரை செலுத்தி, அவர்களை தேர்ச்சி பெற வைக்க வேண்டும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை, நூற்றுக்கு, 100 மதிப்பெண் எடுக்க வைப்பதற்கு நடவடிக்கைகள் உரிய எடுக்க வேண்டும். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க செய்ய வேண்டும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் எடுத்துள்ள நடவடிக்கைளை சி.இ.ஓ., அலுவலகத்திற்கு தெரியபடுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில், தர்மபுரி, பாலக்கோடு, அரூர் மாவட்ட கல்வி அலுவலர்கள், பாலசுப்பிரமணி, சண்முக வேல், பொன்முடி மற்றும், 224 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X