சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேட்டரி திருடிய இருவர் கைது

Added : ஜன 13, 2020
Advertisement

அரூர்: அரூர் அருகே, டிராக்டரில் இருந்து, பேட்டரியை திருடிய இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஒடசல்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன், 40. இவர், கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில், கணபதி பஞ்சர் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். கடந்த, 9 இரவு, 11:00 மணிக்கு, ஒடசல்பட்டியை சேர்ந்த மாது என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டர் டயருக்கு பஞ்சர் போடுவதற்காக, குணசேகரன் கடையில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின், அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது, டிராக்டரில் இருந்த பேட்டரியை காணவில்லை. இது குறித்து குணசேகரன் அளித்த புகாரின்படி, கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேட்டரியை திருடிச்சென்ற மாலகபாடியை சேர்ந்த சுதாகர், 39, கௌாப்பாறை பிரபு, 25 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X