பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : ஜன 13, 2020
Advertisement

குவிந்த குப்பை; சுகாதார சீர்கேடு: சூளகிரி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சேரும் குப்பைகளை கொட்ட, பெரிய அளவில் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது நிறைந்து அதன் கீழே குப்பைகள் சிதறி கிடக்கின்றன. இதை அதிகாரிகள் இதுவரை கண்டுகொள்ளாமல் உள்ளனர். அகற்றுவதற்கு கூட ஏற்பாடுகள் செய்யவில்லை. அதிகாரிகள் வந்து செல்லும் வளாகத்தில் சுகாதார சீர்கேடு நிலவி வந்த போதும், எந்த நடவடிக்கையும் இல்லை. உடனடியாக குப்பையை அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயனின்றி கிடக்கும் அரசு கட்டடம்: கிருஷ்ணகிரி ஒன்றியம், பச்சிகானப்பள்ளி பஞ்., வெங்கிலிகானப்பள்ளியில் கடந்த, 2007ல் மகளிர் குழுவுக்கு கட்டடம் கட்டப்பட்டது. பின்னர் கடந்த, 2010ல், கூடுதல் கட்டடமும் கட்டப்பட்டது. ஆனால், தற்போது இக்கட்டடங்கள் பயன்படுத்தாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டில் இல்லாததால் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்து வருகிறது. எனவே, அதிகாரிகள் இக்கட்டடத்தை பராமரித்து பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும்.

காட்சி பொருளான குடிநீர் தொட்டி: காவேரிப்பட்டணம் ஒன்றியம், ஏணுசோனையில் கடந்த, 2011 - 2012ல், 1 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆழ்துளைக்கிணறு அமைத்து பிளாஸ்டிக் தொட்டி வைக்கப்பட்டது. ஆனால், ஒன்றரை ஆண்டில் மின்மோட்டார் பழுதால், தண்ணீர் ஏற்ற முடியவில்லை. காட்சிப்பொருளாக மட்டுமே உள்ள இத்தொட்டியால், மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் சிரமப்படுகின்றனர். எனவே, மோட்டார் பழுதை நீக்கி தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X