பொது செய்தி

தமிழ்நாடு

ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தொகுதியில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., படுதோல்வி

Added : ஜன 13, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ள இரு சட்டசபை தொகுதிகளில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., படுதோல்வியை சந்தித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர், தளி, வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில், தி.மு.க.,வினர் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். பர்கூர், ஊத்தங்கரையில், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மற்ற ஒன்றியங்களில், அ.தி.மு.க., வெற்றி பெற்றபோதும், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ள இரு சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., படுதோல்வி அடைந்துள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஆகிய மூன்று ஒன்றியங்கள் வருகின்றன. இதில், பர்கூரில் ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை, தி.மு.க., கைப்பற்றி உள்ளது. மத்தூரில் போட்டியில்லாமல், தி.மு.க., தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளது. ஊத்தங்கரை ஒன்றியத்தில் மொத்தமுள்ள, 22 வார்டுகளில், தி.மு.க., கூட்டணி ஒன்பது வார்டுகளில் வெற்றி பெற்று, சுயேச்சைகள் நான்கு பேரின் ஆதரவுடன் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை பிடிக்க வாய்ப்புள்ளது. உள்ளாட்சி தேர்தலில் இரு சட்டசபை தொகுதியிலும் உள்ள ஒன்றியங்களில், படுதோல்வி அடைந்தததால், அ.தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X