பொது செய்தி

தமிழ்நாடு

உலக அமைதியை வலியுறுத்தி 8 கி.மீ., தூரம் நடைப்பயணம்

Added : ஜன 13, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: உலக அமைதியை வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்டோர், 8 கி.மீ., தூரம் நடைப்பயணம் மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி, குளோபல் பேமிலி அமைப்பு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலக அமைதியை வலியுறுத்தி, 8 கி.மீ., நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை, 6:30 மணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன் நடை பயணத்தை துவக்கி வைத்தார். குளோபல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பு வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கிய நடைபயணம், ராயக்கோட்டை சாலையில் உள்ள மாதேப்பட்டி வரை, 8 கி.மீ., தூரம் சென்று நிறைவடைந்தது. கடும் பனியையும் பொருட்படுத்தாமல், மாணவ, மாணவியர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், காந்தி இயக்கம் பிராங்ளின் ஆசாத் காந்தி, வரலாற்று ஆய்வுக்குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, வரலாற்று ஆசிரியர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை உறுப்பினர்கள் சரவணன், சக்தி, கால்பந்து வீரர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X