பொது செய்தி

தமிழ்நாடு

போகியன்று பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக்கூடாது: கலெக்டர் எச்சரிக்கை

Added : ஜன 13, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: போகி பண்டியன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என, கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பொங்கலுக்கு முதல் நாளான போகி பண்டிகையில், பழைய பொருட்களை எரிப்பதென்பது, பழையன கழிதல் என்ற வழக்கத்துக்கு அடையாளமாகும். இந்த நாளில், கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்ட கொளுத்துவர். பெரும்பாலும், நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இந்த பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும். ஆனால், தற்போது போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரத்தில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்கும் போது நச்சு புகைமூட்டம் ஏற்பட்டு, மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல் கண், மூக்கு எரிச்சல் உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. கரிய புகையாலும், காற்று மாசுபட்டு நகரமே, கறுப்பு நகரமாக மாறுகிறது. நச்சுப்புகை கலந்த பனிமூட்டத்தால் சுகாதார பாதிப்பும், சாலை போக்குவரத்துக்கும் தடை ஏற்படுகிறது. இது போன்ற செயல்கள் மூலம், காற்று மாசுபடுத்தப்படுவது சட்டப்படி குற்றம். மேலும், உயர்நீதிமன்றம் பழைய மரம், வரட்டி தவிர வேற எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. இதை மீறுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X