பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணையில் ஏழு ஷட்டர் அகற்றும் பணி முடிவு

Added : ஜன 13, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணையில், ஏழு பழைய ஷட்டர்களை அகற்றும் பணி நிறைவடைந்தது.
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையின் பிரதான ஏழு ஷட்டரில், முதல் ஷட்டர் கடந்த, 2017 நவ., 29ல் உடைந்தது. இதையடுத்து, 2018 ஆக., 14ல் ஒரு புதிய ஷட்டர் பொருத்தப்பட்டது. மற்ற ஏழு ஷட்டர்களும் சேதமடைந்திருக்கும் என்பதால், மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி, 19.07 கோடி ரூபாய் செலவில், ஏழு ஷட்டர்களை மாற்ற, பழைய ஏழு ஷட்டர்களை வெட்டி அகற்றும் பணி கடந்த, 3ல் துவங்கியது. 23 தொழிலாளர்கள் ஷட்டர்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அகற்றினர். இதில், கடந்த, 6 வரை இரண்டு ஷட்டர்கள் அகற்றிய நிலையில், நேற்று முன்தினம் மாலை, மற்ற ஐந்து ஷட்டர்களையும் முழுமையாக அகற்றினர். நேற்று காலை முதல், இரண்டு புதிய ஷட்டர்களை பொருத்த வேண்டி, அணை மீது நான்கடி உயரத்தில் இரும்பு தகடுகளை வைத்து, தடுப்பு ஏற்படுத்தினர். இரண்டு நாட்கள் நடக்கும் இப்பணிகளுக்கு பிறகு, பொங்கல் பண்டிகைக்காக, தொழிலாளர்கள் மூன்று நாள் விடுமுறையில் செல்கின்றனர். விடுமுறை முடிந்து, புதிய ஷட்டர்கள் பொருத்தும் பணி தொடர்ந்து நடக்கும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 31.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 125 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வாய்க்காலில், 158 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X