பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : ஜன 13, 2020
Advertisement

பயன்பாடின்றி உள்ள சிறுவர் பூங்கா: கரூர் அடுத்த, நெரூர் பிரமேந்திராள் கோவில் மற்றும் அக்னீஸ்வரர் கோவில் ஓரம், காவிரியாறு அமைந்துள்ளதால் இங்கு குளித்துவிட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம். இப்பகுதியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சிறுவர்கள் விளையாடும் பூங்கா மற்றும் ஆண்கள், பெண்கள் உடை மாற்றும் வசதி கொண்ட கட்டடங்கள் உள்ளன. ஆனால், அவை சுற்றுலா பயணிகளுக்கு பயன்பாடின்றி கிடப்பதால், பொதுமக்கள் வேதனையில் உள்ளனர்.

- எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நெரூர் வடபாகம்.

வேகத்தடைக்கு வெள்ளை அடிக்கலாமே: கரூர், தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில், சாலையில் விபத்தை தடுக்கும் வகையில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில், வெள்ளைக் கோடுகள் போடப்படவில்லை. இதனால், அவ்வழியே புதிதாக வரும் வாகன ஓட்டிகள், சிரமத்துக்குள்ளாகின்றனர். இரவில், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், வேகத்தடை இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

- எஸ்.தீனேஷ்குமார். தான்தோன்றிமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X