புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி

Added : ஜன 13, 2020

குளித்தலை: பரளி கிராமத்தில், அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுதல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., பரளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில், பசுமைப்படை மூலம் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து பேரணி நடந்தது. தலைமையாசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ராஜேந்திரம் பஞ்., தலைவர் ரெத்தினவள்ளி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரணி, பள்ளியில் இருந்து துவங்கி, பரளி கிராமத்தில் முக்கிய தெருக்கள் வழியாக, ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலை பிரிவு சாலை வரை சென்று பள்ளிக்கு வந்தடைந்தது. பள்ளி நிர்வாகி செந்தில்குமார், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், கிருஷ்ணராயபுரம் யூனியன், அய்யம்பாளையம் யூனியன் தொடக்கப்பள்ளி பசுமைப்படை மூலம், புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து பேரணி நடந்தது. தலைமையாசிரியர் குமரவேல் தொடங்கி வைத்தார். மக்கள் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X