பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்க்க வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்க்க வேண்டுகோள்

Added : ஜன 13, 2020

கரூர்: கரூர் கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: பொங்கல் திருநாளுக்கு முன், வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். தற்போது, போகி பண்டிகையின் போது, பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள். ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. மேலும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. போகி பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X