பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்ட 2 தி.மு.க., கவுன்சிலர்கள்

Added : ஜன 13, 2020
Advertisement

கரூர்: தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் தலைவர் தேர்தலில், இரண்டு, தி.மு.க., கவுன்சிலர்கள் கட்சி மாறி, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டுள்ளனர். யார் அந்த கறுப்பு ஆடுகள் என, தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியனில் உள்ள, 13 வார்டுகளில், அ.தி.மு.க., சார்பில் எட்டு பேரும், தி.மு.க., சார்பில், ஐந்து பேரும் வெற்றி பெற்றிருந்தனர். நேற்று முன்தினம் காலையில் நடந்த யூனியன் தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், 13 வது கவுன்சிலர் சிவகாமியும், தி.மு.க., சார்பில், ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் கவிதாவும் போட்டியிட்டனர். அதில், அ.தி.மு.க., கவுன்சிலர் சிவகாமி, 10 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,வுக்கு எட்டு ஓட்டுகள் உள்ள நிலையில், 10 ஓட்டுகள் விழுந்ததால், தி.மு.க., தரப்பில் இரண்டு பேர், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டுள்ளனர். இதனால், தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், மதியம் நடந்த துணைத் தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், 10 வது வார்டு கவுன்சிலர் பெரியசாமியும், தி.மு.க., சார்பில், மூன்றாவது வார்டு கவுன்சிலர் ராஜாவும் போட்டி யிட்டனர். அதில், அ.தி.மு.க., வேட்பாளர் பெரியசாமி, எட்டு ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் ராஜாவுக்கு ஐந்து ஓட்டுகள் கிடைத்தன. காலையில் நடந்த, யூனியன் தலைவர் தேர்தலில், தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு போடாத, இரண்டு, தி.மு.க., கவுன்சிலர்கள், மதியம் நடந்த துணைத்தலைவர் தேர்தலில், தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு போட்டு கட்சி விசுவாசத்தை காட்டியுள்ளனர். தலைவர் தேர்தலில், கட்சி மாறி ஓட்டு போட்ட, இரு கறுப்பு ஆடுகள் யார் என்பது குறித்து, கண்டுபிடிக்கும் பணியில் தி.மு.க., வினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X