பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஜன 13, 2020
Advertisement

குடிநீர் குழாய் உடைப்பு; வீணாகும் தண்ணீர்: கரூர், ரயில்வே ஸ்டேஷன் சாலையில், காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் வீணாக ஆறு போல தண்ணீர் ஓடுகிறது. இதுபோல், அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், நீர் செல்லும் வேகம் குறைந்து, மேடான பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். இங்கு தரம் குறைந்த குழாய்கள் பதிக்கப்படுவதால், நீரின் அழுத்தம் தாங்க முடியாமல் உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது.
காய்ந்த மரம் அகற்றப்படுமா? கரூர், வெண்ணைமலை சாலையில், பட்டுப்போன காய்ந்த மரம், வெட்டி அகற்றப்படாமல் பல மாதங்களாக உள்ளது. அந்த வழியாக, பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. காய்ந்த மரம் உடைந்து, வாகனங்களின் மீது விழுந்தால், பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன், காய்ந்த மரத்தை அகற்ற, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போர்வெல் வறண்டது; குடிநீர் தொட்டி வீண்: கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகில், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. போர்வெல் மூலம், சின்டெக்ஸ் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. வறட்சி காரணமாக போர்வெல் வறண்டு விட்டதால், தொட்டிக்கு தண்ணீர் நிரப்புவது கிடையாது. மாற்று குழாய் மூலம், சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்பினால், இப்பகுதி மக்கள் பயனடைவர்.

சேதமான மின் கம்பம் மாற்றப்பட வேண்டும்: கரூர், சிவசக்தி நகரில் மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மின்தடை ஏற்படும் போது, கம்பத்தில் ஏறி, பழுது பார்ப்பது சிரமமாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் பலன் இல்லை. சேதமான கம்பம் உடைந்து விழுந்தால், பல வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கும் அபாயம் இருப்பதால், கம்பத்தை மாற்ற வேண்டும்.

தேங்கி கிடக்கும் குப்பையால் அவதி: க ரூர் அருகே, வெண்ணைமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். இப்பகுதியில், போதுமான குப்பைத்தொட்டி வைக்கப்படவில்லை. பொதுமக்கள் குப்பையை சாலையில் வீசுகின்றனர். அதை முறையாக அப்புறப்படுத்துவதும் இல்லை. இதனால், அதிகளவில் குப்பை சேர்ந்து, துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தேவைக்கேற்ப, குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X