சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெய்தலூர் பஞ்., துணைத்தலைவர் தேர்தல் தகராறு: மூவர் மீது வழக்கு

Added : ஜன 13, 2020
Advertisement

குளித்தலை: நெய்தலூர் பஞ்., துணைத்தலைவர் பதவிக்காக நடந்த தகராறில், பா.ஜ., மாவட்ட தலைவர் வீட்டை சேதப்படுத்தி, நான்கு பேர் மீது தாக்குதல் நடத்திய, மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குளித்தலை அடுத்த, நெய்தலூர் பஞ்., சின்னபனையூரை சேர்ந்தவர் கரூர் மாவட்ட பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் சிவசக்தி, 40. இவர், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், 11வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். நேற்று முன்தினம் நடந்த மறைமுக தேர்தலில், துணைத்தலைவர் பதவிக்கு சிவசக்தியும், ஐந்தாவது வார்டு உறுப்பினரான மணிவேலும் முயற்சி செய்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த, 10ல் இரவு, 10:00 மணியளவில் மணிவேலின் உறவினர்கள் தினேஷ், லட்சுமணன் மற்றும் சிலர் சிவசக்தி வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது, சிவசக்தி வீட்டில் இல்லாததால் அவரது தந்தை மலையாளி, அவரது தாய் பாப்பாத்தி, 58, உறவினர் அசோக், 30, உள்பட நான்கு பேரை ஆயுதங்களால் தாக்கினர். உங்களது மகன் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால், கொலை செய்து விடுவதாக மிரட்டினர். வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். நேற்று முன்தினம் நடந்த துணைத்தலைவர் தேர்தலில், பா.ஜ., மாவட்ட தலைவர் சிவசக்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவசக்தியின் உறவினர் அசோக், 30, கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிவேல், தினேஷ், லட்சுமணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X