சாலையில் மணல் திட்டுகள்; வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து| Dinamalar

சாலையில் மணல் திட்டுகள்; வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

Added : ஜன 13, 2020

கரூர்: கரூர் மாவட்டம், தரகம்பட்டியில், பழைய கடவூர் தாலுகா அலுவலகம் எதிரில், மணப்பாறை சாலையில் மணல் திட்டுகள் அதிகம் காணப்படுகின்றன. அந்த இடம் வளைவு பகுதியாக இருப்பதால், பஸ்கள் வரும்போது இரு சக்கர வாகனங்களில் செல்வோர், மணல் திட்டுகளின் மீது ஏற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், டூவீலர்கள் நிலை தடுமாறுகின்றன. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மழை பெய்தால், சாலையோரங்களில் மணல் தேங்கி நிற்கிறது. மணல் திட்டுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X