அரசு பள்ளியில் விதைப்பந்து தயாரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் விதைப்பந்து தயாரிப்பு

Added : ஜன 13, 2020

குமாரபாளையம்: குமாரபாளையம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமைப்படை, வனம் செய்வோம் என்ற அமைப்பும் இணைந்து, விதைப்பந்து தயாரிப்பு பணி முகாம் நடத்தியது. தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார். இது குறித்து, தேசிய பசுமைப்படை ஆசிரியர் மணிகண்டன் கூறியதாவது: இதில் பங்குபெற்ற மாணவர்கள், 1,301 விதைப் பந்துகளை உருவாக்கினர். 'இனி விதைகளே பேராயுதம்' என்ற தலைப்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்துரை வழங்கப்பட்டது. விதைப் பந்துகளை உருவாக்குவதன் மூலம், பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களது பங்களிப்பை செலுத்தி, இயற்கையை பேணிக்காப்போம் என்று உறுதிமொழியேற்றனர். இவ்வாறு அவர் கூறினார். வனம் செய்வோம் அமைப்பின் நிர்வாகிகள் வருண் சுப்பிரமணியம், கதிர்வேல், குரு, பிரகாஷ், மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X