சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலம் கேட்டு மருமகள் தொல்லை? 65 வயது மாமனார் விபரீத முடிவு

Added : ஜன 13, 2020
Advertisement

மொடக்குறிச்சி: நிலம் கேட்டு மருமகள் தொல்லை கொடுத்ததால், 65 வயது மாமனார், விபரீத முடிவை நாடியது, உறவினர்கள் மத்தியில், பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகிரி, கந்தசாமிபாளையம், விளாங்காட்டு வலசை அடுத்த வாய்க்கால்மேடு, செம்மடைதோட்டத்தை சேர்ந்தவர் குப்புசாமி, 65; மனைவி இறந்த நிலையில், மகன் குமரவேல், மருமகள் கவுரியுடன் வசித்தார். குப்புசாமிக்கு மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. தன்னை கவனித்துக் கொள்ள மருமகள் கவுரிக்கு, ஒரு ஏக்கர் நிலத்தை, ஆறு மாதத்துக்கு முன் எழுதி வைத்தார். அவரோ, மீதி இரண்டு ஏக்கரையும், எழுதி வைக்கும்படி, தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான குப்புசாமி, நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, கிணற்றில் குதித்து விட்டார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பலியானார். மகன் குமரவேல் அளித்த புகாரின்படி, சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X