காங்.,ஐ புறக்கணித்த எதிர்க்கட்சிகள்: திமுகவும் ‛ஆப்சென்ட்'

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்., அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக மம்தா, மாயாவதி, கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே ஆகியோர் அறிவித்துள்ளனர். மேலும், பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் திமுக சார்பிலும், யாரும் பங்கேற்கவில்லை.latest tamil newsகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், டில்லியில் இன்று (ஜன.,13) கூட உள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்தியில் உள்ள, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்டும் முயற்சியாகவும், இந்த கூட்டம் நடக்கவுள்ளது.


latest tamil newsபிற்பகல் 2 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் இந்த கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசிப்பதற்காக காங்., அழைப்பு விடுத்தது.
இந்த கூட்டத்தை மஹா.,வில் கூட்டணியில் இருக்கும் சிவசேனா உட்பட, முக்கிய கட்சிகள் பலரும் புறக்கணித்துள்ளதால் காங்., வட்டாரங்கள் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் திமுக சார்பிலும் யாரும் பங்கேற்கவில்லை. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இருகட்சிக்கு இடையேயான கூட்டணியில் பிரச்னை இருப்பதால் திமுக.,வினர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
13-ஜன-202023:27:35 IST Report Abuse
unmaitamil இப்போதுதான் எல்லோருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தின் உண்மை புரிந்துள்ளது. அதனால் எதிர்ப்பு கூட்டம் குறைய தொடங்கிவிட்டது. இனி காணாமல் போகும்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
13-ஜன-202021:29:09 IST Report Abuse
தமிழ்வேள் தேசத்துரோக குற்றச்சாட்டில் நாலு எதிர்க்கட்ச்சிகள் பாகிஸ்தான் அடிமை கடசிகளை தடைசெய்து அதன் தலைவன் தொண்டன் என்று ஒரு கூட்டத்தை இமயமலை பகுதியில் திறந்தவெளி சிறை ஏற்படுத்தி அதில் விசாரணை இன்றி உறைபனி காலத்தில் குறைந்த பட்ச உடைகள் குறைந்தபட்ச உணவு குடிக்க புழங்க ஐஸ் தண்ணீர் என்று ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு விட்டுவிடுங்கள் தேசத்துரோகம் காணாமல் போய்விடும் [ பப்பு சுடலை ஆமைக்கறி சைக்கோ என்று அதற்க்கு தகுதியான டிக்கெட்டுகள் இங்கு மிக அதிகமாக இருக்கின்றன ]
Rate this:
Cancel
Arivazhagan - Kovai,இந்தியா
13-ஜன-202019:55:38 IST Report Abuse
Arivazhagan உதயநிதி டெல்லியில் தானே இருந்தார் ? வரவில்லையா ? பிரசாந்த் கிஷோர் போக வேண்டாம் என்று சொல்லி இருப்பார் .எனக்கு என்னவோ பிரசாந்த் கிஷோர் புல் தடுக்கி பயில்வான் தளபதி சுடலினை வச்சு செய்யறாரு என்று நினைக்கிறேன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X