பொது செய்தி

தமிழ்நாடு

பதவியேற்ற 7 நாளில் பஞ்., தலைவர் மரணம்

Added : ஜன 13, 2020
Advertisement

சென்னிமலை: பதவியேற்ற ஏழு நாளில், சென்னிமலையில் பஞ்சாயத்து தலைவர் மரணமடைந்தது, சோகத்தை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை யூனியன், முகாசிபுலவன்பாளையம் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றவர் குணசேகரன், 66. கடந்த, 6ல் பதவியேற்ற நாளிலேயே, உடல் நலக்குறைவு அடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மதியம் இறந்தார். இதையடுத்து சொந்த ஊரான, முகாசிபுலவன்பாளையம், பாலாஜி கார்டனுக்கு, உடல் கொண்டு வரப்பட்டது. மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இரவில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த பஞ்., தலைவர் குணசேகரனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X