பொது செய்தி

தமிழ்நாடு

பாரியூர் கொண்டத்து காளியம்மன் பிரமாண்ட மலர் பல்லக்கில் ஊர்வலம்

Added : ஜன 13, 2020
Advertisement

கோபி: குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பாரியூர் கொண்டத்து காளியம்மன், பிரமாண்ட மலர் பல்லக்கில், நேற்று அதிகாலை கோபியில் பவனி வந்தார்.
ஈரோடு மாவட்டம், கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழாவில், கடந்த, 9ல் தீ மிதி விழா நடந்தது. இதையடுத்து தேரோட்டம் நடந்தது. மலர்ப்பல்லக்கு ஊர்வலம், கோலாகலமாக நேற்று அதிகாலை நடந்தது. சம்பங்கி, மஞ்சள் மற்றும் வெள்ளை செவ்வந்தி, ரோஜா உள்ளிட்ட மலர்களால், பிரமாண்ட மலர்ப் பல்லக்கு தயார் செய்யப்பட்டது. பின் பூக்கள் மீது, சீரியல் பல்புகள் மற்றும் ஒளிரும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மலர்கள் மற்றும் அணிகலன்களால், அலங்கரிக்கப்பட்ட உற்சவர், அம்மன் கோவிலில் இருந்து, நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டார். பாரியூரில் துவங்கி, பதி, வெள்ளாளபாளையம் பிரிவு, நஞ்சகவுண்டன்பாளையம் பிரிவு, முருகன்புதூர், மேட்டுவலவு வழியாக, கோபி நகரை அடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து, பல்லக்கில் பவனி வந்த அம்மனை தரிசித்தனர். சரவணா தியேட்டர் சாலை, பெருமாள் கோவில் வீதி, ராஜவீதி, கடைவீதி வழியாக, கோபி பெருமாள் கோவிலை அடைந்தது. அம்மன் மலர் பல்லக்கு பவனி வந்ததால், கோபி டவுன் விழாக்கோலம் பூண்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X