சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணக்கெடுப்பு நடத்த வந்த ஊழியர்கள் சுற்றிவளைப்பு

Added : ஜன 13, 2020
Advertisement

அரவக்குறிச்சி: சுகாதாரம் மற்றும் கழிப்பறை தகவல் சேகரிப்பதாக, வீடு வீடாக கணக்கெடுப்பில் ஈடுபட்ட, தனியார் நிறுவன ஊழியர்கள் நான்கு பேரை, பொதுமக்கள் சுற்றிவளைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில், நான்கு பேர் வீடு வீடாக சென்று குடும்பத்தலைவர் பெயர் மற்றும் சில தகவல்களை சேகரித்தனர். அவர்களிடம், அப்பகுதி மக்கள் 'எதற்கு கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளீர்' என்று கேட்டதற்கு, அவர்கள் 'மதுரையிலிருந்து ஒரு தனியார் நிறுவனத்துக்காக சுகாதாரம் மற்றும் கழிப்பறை தொடர்பாக' தகவல் சேகரிப்பதாக கூறியுள்ளனர். இதற்கிடையே, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அவர்கள் கணக்கெடுப்பதாக வதந்தி பரவியது. கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்களை, அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தனர். இதனால், போலீஸ் ஸ்டேஷன் முன் முஸ்லிம்கள் திரண்டனர். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார், உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும், கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள், உரிய ஆவணங்களை போலீஸ் ஸ்டேஷனில் காண்பித்து அனுமதி பெற்ற பிறகே, பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதன் பிறகு, அரவக்குறிச்சியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு யாரும் வர அனுமதி இல்லை' என, தெருக்களில் போஸ்டர் ஒட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X