சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது கார் மோதியது: இரு குழந்தைகளுடன் தந்தை பலி; தாய் படுகாயம்

Added : ஜன 13, 2020
Advertisement

குளித்தலை: குளித்தலை அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில், இரு குழந்தைகளுடன் தந்தை பலியானார்.
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் அமலாபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 37. இவர், மினரல் வாட்டர் கேன்களை விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி மீனா, 30. இவர்கள், தங்களது இரு குழந்தைகளுடன் கவாசகி பைக்கில் நேற்று மதியம், 3:00 மணியளவில், கரூர் மாவட்டம், தோகைமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக, மேலவெளியூரில் உள்ள வளைவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற போர்டு கார், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் சீனிவாசன், மீனா, குழந்தைகள் கனிஷ்கா, 4, தருண், 2 ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், நான்கு பேரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில், குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தையின் பெற்றோர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், சீனிவாசன் இறந்தார். தோகைமலை போலீசார், தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X