பொது செய்தி

தமிழ்நாடு

ஓடும் பஸ்சை நிறுத்தி அமைச்சர் திடீர் ஆய்வு

Added : ஜன 13, 2020
Advertisement

கரூர்: கரூர் அருகே, குளிர்சாதன வசதி கொண்ட பஸ்சை நிறுத்தி, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே கரைப்பாளையம் வழியாக, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோவையில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த, குளிர் சாதன வசதி கொண்ட பஸ்சை, அமைச்சர் விஜயபாஸ்கர் சைகை காட்டி நிறுத்தினார். பிறகு, பஸ்சில் ஏறிய அவர், டிரைவர், கண்டக்டரிடம் பஸ் செயல்பாடு, பயணிகளிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா, வேறு ஏதாவது வசதிகள் செய்ய வேண்டுமா என, கேட்டார். பிறகு, பயணிகளுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய, அமைச்சர் விஜயபாஸ்கர், பஸ்சை விட்டு இறங்கினார்.

தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள்: நேற்று, கரூர் பஸ் ஸ்டாண்டில், 13 வழித்தடங்களில் புதிய டவுன் பஸ் தொடக்க விழா நடந்தது. இதை துவக்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், நிருபர்களிடம் கூறுகையில், ''பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, சேலம், கோவை, திருச்சி, திருப்பூர் நகரங்களில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தற்காலிக சிறப்பு பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன,'' என்றார். நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா, கரூர் மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X