சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அளவுக்கு அதிகமாக மது: மாஜி ராணுவ வீரர் சாவு

Added : ஜன 13, 2020
Advertisement

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில், அளவுக்கு அதிகமாக மது குடித்த முன்னாள் ராணுவ வீரர் இறந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நாராயணா நகரை சேர்ந்தவர் சுந்தரம், 62; முன்னாள் ராணுவ வீரரான இவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை, ஊத்தங்கரை எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடை அருகே, சுந்தரம் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின்படி சம்பவ இடம் சென்ற போலீசார், சுந்தரத்தின் உடலை மீட்டு விசாரித்தனர். அதில், சுந்தரம் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தார் என தெரியவந்தது. இது குறித்து, ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X