சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் தலைவருக்கு அடி: ஊராட்சியில் தீராத பிரச்னை

Added : ஜன 13, 2020
Advertisement

ஓமலூர்: தாரமங்கலம், கருக்கவாடியில், ஊராட்சி தலைவர் பதவி ஏற்பு விழா, கடந்த, 6ல் நடந்தது. அப்போது, பா.ம.க.,வைச் சேர்ந்த தலைவர் பாப்பாகணேசன் ஆதரவாளர்கள், அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த, முன்னாள் தலைவர் பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே, வார்டு கவுன்சிலர்களை வளைப்பதில் மோதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மகேஸ்வரி, துணைத் தலைவராக பதவியேற்றார். அந்த விழா முடிந்த நிலையில், பழனிசாமி, அவரது ஆதரவாளர்கள், பா.ம.க., மாநில அமைப்பு செயலர் சரவணனிடம், செருப்பை காட்டி திட்டியுள்ளனர். இதுகுறித்து, பழனிசாமி வீட்டுக்கு சென்று, நேற்று, சரவணன் நியாயம் கேட்டபோது, தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இதில், பழனிசாமி உள்ளிட்ட ஐவர் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்தில், போலீஸ் குவிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X