சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.16 கோடி மோசடி: கமிஷனரிடம் விவசாயி புகார்

Added : ஜன 13, 2020
Advertisement

சேலம்: திருச்செங்கோடு அருகே, அத்தாம்பாளையம், புள்ளாக்கவுண்டனூரைச் சேர்ந்த, விவசாயி பழனிவேல், 49, நேற்று, சேலம் போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் அளித்த புகார் மனு: சங்ககிரி, திருச்செங்கோடு பகுதிகளைச் சேர்ந்த சிலர், இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை தருவதாக தெரிவித்தனர். அதை நம்பி, விவசாய நிலத்தை விற்று, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, 50 லட்சம், கொண்டலாம்பட்டியில், 40 லட்சம், சூரமங்கலத்தில் வைத்து, 26 லட்சம் என, மொத்தம், 1.16 கோடி ரூபாயை வழங்கினேன். ஆனால், வெளிநாட்டு பணத்தை தரவில்லை. அத்துடன், நான் வழங்கிய பணத்தையும் தர மறுக்கின்றனர். அவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சூரமங்கலம் போலீசார் விசாரிக்க, கமிஷனர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X