கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், 13 வழித்தடங்களில் புதிய டவுன் பஸ் தொடக்க விழா நேற்று நடந்தது. இதை, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு சார்பில், 5,000 புதிய பஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், 2,000 பஸ்கள் புதிதாக இயக்கப்படும். படுக்கை வசதியுடன் கூடிய பஸ்கள், இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்கள், குறைந்த தூரத்தில் இயங்கக்கூடிய பஸ்களில் குளிர்சாதன வசதி, முதியவர்கள், உடல்நல குறைபாடுடையவர்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கழிவறையுடன் கூடிய பஸ்கள் என, அனைவரின் அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக, பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, சேலம், கோவை, திருச்சி, திருப்பூர் நகரங்களில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தற்காலிக சிறப்பு பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா, கரூர் மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE