நாமக்கல்: உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால், நுகர்வு அதிகரித்து கறிக்கோழி கொள்முதல் விலை, ஒரு வாரத்தில், 13 ரூபாய் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. டிச., 14ல், 77 ரூபாய் என, கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதையடுத்து, படிப்படியாக உயர்ந்து, 30ல், 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜன., 3ல், 86, 4ல், 89, 5ல், 94, 6ல், 97 10ல், 99 என, ஒரு வாரத்தில், 13 ரூபாய் அதிகரித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, நுகர்வு அதிகரித்துள்ளதால், கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே, பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதால், உற்பத்தியை குறைத்துள்ளனர். வழக்கமாக வாரம், இரண்டு கோடி கிலோ உற்பத்தி செய்து வந்த நிலையில், தற்போது, 20 லட்சம் கிலோ குறைத்து, 1.80 கோடி கிலோ உற்பத்தி செய்கின்றனர். அதாவது, 10 சதவீதம் உற்பத்தி குறைந்துள்ளது. கொள்முதல் விலை, 99 ரூபாய் என, நிர்ணயம் செய்திருந்தாலும், 90 ரூபாயக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த கொள்முதல் விலை மேலும், அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE