நாமக்கல்: நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
நாமக்கல்-மோகனூர் சாலையில், நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு, குழந்தைகள் நலம், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, பிரசவ வார்டு, கண் மருத்துவம், காசநோய் உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. பல வார்டுகள் தொடர்ந்து, 24 மணி நேரமும் செயல்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும், 2,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், 300க்கும் அதிகமானோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் கவனிப்பு, சுகாதாரம், பராமரிப்பு போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தரச்சான்று பெற்றுள்ளது. இம்மருத்துமனையை, மருத்துவமனை கல்லூரிக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது, பல்வேறு தரப்பினரின் நீண்ட நாள் கோரிக்கை. இந்நிலையில், நாமக்கல்லில், அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க, தமிழக அரசின் பரிந்துரைபடி, மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை கடந்த, 8 ல், தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது, நாமக்கல் மாவட்ட மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE