சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணை தலைவர் தேர்தலில் தோல்வி: வார்டு உறுப்பினர் வீடு சூறை

Added : ஜன 13, 2020
Advertisement

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே, துணைத்தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த ஆத்திரத்தில், வார்டு உறுப்பினர் வீடு சூறையாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, காட்டுகாநல்லூர் பஞ்., துணைத் தலைவர் தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. இதில், வார்டு உறுப்பினர் சங்கீதா விஜயகுமார், கவிதா சுதாகர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், கவிதா சுதாகர் ஏழு ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். சங்கீதா விஜயகுமார் ஆறு ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். இவர் தோல்வியடைய காரணம், வார்டு உறுப்பினர் முரளிகிருஷ்ணன் ஓட்டு போடாததால்தான் என ஆத்திரமடைந்து, சங்கீதாவின் கணவர் விஜயகுமாரும், அவரது ஆதரவாளர்கள், 10 பேரும் சேர்ந்து, ரெட்டிப்பளையத்தில் உள்ள முரளிகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று, அவருடைய மாமியார் முல்லைலட்சுமியை தாக்கினர். மேலும், அங்கிருந்த கேபிள் 'டிவி' ஒளிபரப்பு கடை மற்றும் 'டிவி'க்களை அடித்து நொறுக்கினர். இதனால், அப்பகுதியில் கேபிள் 'டிவி' ஒளிபரப்பு தடைபட்டது. கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X