பொது செய்தி

தமிழ்நாடு

தகுதியானோருக்கு தாற்காலிக தாசில்தார் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

Added : ஜன 13, 2020
Advertisement

திருவண்ணாமலை: தகுதியானோருக்கு தாற்காலிக தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2, நேரடி நியமன அலுவலர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில், தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2, நேரடி நியமன அலுவலர் சங்க மாவட்ட செயற்குழுக்கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 2012ம் ஆண்டு பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டுகள் துணை தாசில்தார் பயிற்சி முடித்த தகுதியானோருக்கு காலியாக உள்ள இடங்களில் தாற்காலிக தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும். 2018ம் ஆண்டு, பணியில் சேர்ந்த உதவியாளர்களுக்கு, பவானி சாகர் பயிற்சி, ஒரத்தநாடு நில அளவை பயிற்சிகளை வழங்க வேண்டும். பணி மாறுதல்கள், பதவி உயர்வின்போது கவுன்சிலிங் முறையை மாவட்ட நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டும். சங்க நிர்வாகிகளை அவர்களது சொந்த வட்டத்திலேயே பணியமர்த்த வேண்டும். காவல்துறை பயிற்சிக்கு அனுப்பும் நடைமுறையை முன்பு இருந்த நிலையிலேயே, எட்டு நபர்களையும், நீதிபரிபாலன பயிற்சிக்கு, எட்டு நபர்களையும் தொடர்ந்து அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X