சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் காதல் திருமணம்: தாய் விபரீத முடிவு

Added : ஜன 13, 2020
Advertisement

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த இளநீர்குன்றத்தை சேர்ந்தவர் மனோன்மணி, 52. கணவரை இழந்தவர். இவரது மகள் மகாலட்சுமி, 23. இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 29ல், வழக்கம்போல் பணிக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. விசாரித்ததில், மகாலட்சுமி, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 27, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, மனோன்மணி கடந்த, 9ல், மணிகண்டன் வீட்டிற்கு சென்று மகளை அழைத்தார், அவர் வர மறுத்தார். ஆத்திரமடைந்த மணிகண்டன், அவரது சகோதரர் சூர்யா, 25, தந்தை முருகன், 54, தாய் லட்சுமி, 52, ஆகியோர், மனோன்மணியை சரமாரியாக தாக்கினர். படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மனோன்மணி, நேற்று முன்தினம் விஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று உயிரிழந்தார். இது குறித்து, அனக்காவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X