பொது செய்தி

இந்தியா

இடதுசாரிகள் மீது நடவடிக்கை : பிரதமருக்கு கல்வியாளர்கள் கடிதம்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (12)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் சூழலை மோசமாக்கும் இடதுசாரி அமைப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்கலை., துணைவேந்தர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.


பிரதமருக்கு அவர்கள் எழுதி உள்ள கடிதத்தில், மாணவர்கள் அரசியல் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களின் சூழலை குலைத்து இடதுசாரி சிந்தனைகளை திணிக்கிறார்கள். ஜே.என்.யு., முதல் ஜாமியா வரை, இடதுசாரி அமைப்புக்களின் சிறு குழுக்கள் கல்வி நிறுவனங்களின் சூழலை சீர்குலைக்கும் வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் உள்ளன, என குறிப்பிடப்பட்டுள்ளன.
"கல்வி நிறுவனங்களில் இடதுசாரிகளின் அராஜகத்திற்கு எதிரான கூற்று" என்ற தலைப்பில் பல்வேறு பல்கலை.,களை சேர்ந்த துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பி உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டம், ஜேஎன்யு.,வில் சமீபத்தில் நடந்த வன்முறை உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக பல்கலை.,களில் போராட்டங்கள் தூண்டி விடப்படுவதாக சுமார் 208 கல்வியாளர்கள் தங்களின் கடிதத்தில் குற்றம்சாட்டி உள்ளனர். இடதுசாரி கொள்கைகளால் கல்வி நிறுவனங்களில் போராட்டங்கள், தர்ணாக்கள், மூடல்கள் அதிகரித்து வருவதை பிரதமர் தலையிட்டு தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்கள் தங்களின் கல்வி வாய்ப்பை இழப்பதுடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்கள் இதனால் கடுமையாக பாதிப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-ஜன-202023:55:36 IST Report Abuse
Rajagopal ஜெ என் யூவைப் போன்ற கலவரம் நிறைந்தப் பல்கலைக் கழகங்களையும், கல்லூரிகளையும் ஒரு வருடத்திற்கு இழுத்து மூட வேண்டும். அவை மூடியிருக்கும் சமயத்தில், நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். மாணவர்களை இடது/வலது சாரி சிந்தனையால் தூண்டி விடும் பேராசியர்களைக் கணக்கெடுத்துக் கட்டாய ஓய்வு கொடுத்து விட வேண்டும். இந்த மாதிரிக்கு கல்லூரிகளைக் கண்காணித்து, கலவரம் ஏற்படும் சந்தர்ப்பங்களை உடனே சமாளிக்க ஒரு பாதுகாப்புப் படை உண்டாக்க வேண்டும். CCTV அமைக்க வேண்டும். அதன் பிறகு, எல்லா மாணவர்களையும் மீண்டும் அனுமதி செய்ய வேண்டும். இதில் ஏற்கனவேக் கலவரம் செய்து, ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களை அனுமதிக்கக் கூடாது. மற்ற மாணவர்களிடமும், புதிய மாணவர்களிடமும், கலவரம், வன்முறை, ஆர்ப்பாட்டம், கல்லூரி விதிமுறைகளை மீறுதல் போன்றவற்றிற்கு என்ன மாதிரி அபராதம், தண்டனை என்று எழுத்துப் பூர்வமாக விளக்கி, அதில் அவர்களைக் கையெழுத்துப் போட வைக்க வேண்டும். டெபாசிட் வாங்க வேண்டும். எல்லாம் ஒழுங்காக இருந்தால், அவர்கள் படிப்பு முடியும் போது அந்த டெபாசிட் திரும்பக் கொடுக்க வேண்டும். பாடத் திட்டங்களை பரிசீலனை செய்து, அரசியல் கலக்காத வகையில் பாடங்களை அமைக்க வேண்டும். இதெல்லாம் செய்தால் ஒரு தலைமுறையில் இந்த மாதிரி தண்ட சோறு திங்கும் ரவுடிகள் உற்பத்தியாக மாட்டார்கள். கல்வி அரசியல்வாதிகள், வியாபாரிகள் கையில் இருக்கக் கூடாது.
Rate this:
Share this comment
Cancel
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
13-ஜன-202022:33:20 IST Report Abuse
KumariKrishnan Bjp பல்கலைக் கழகங்களில் ஐந்தாம்படையின் அட்டூளியம் நடக்கிறது இந்திய எதிரிகள் உலகம் முழுமையும் இருந்துக்கொண்டு இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள் அவர்கள் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், திமுக, திக போன்ற அமைப்புகளில் உள்ள சமூக விரோதிகளை விலைக்கு வாங்கி தங்களின் வேலையை செய்கிறார்கள் அன்னிய இந்திய எதிரிகளின் கைக்கூலிகள் நமது பல்கலை கழகங்கள் ஊடகம் பத்திரிக்கை ஆகியவற்றில் ஊடுருவி இந்திய எதிர்ப்பை விதைத்து வருகிறார்கள் சமீபத்தில் ஒருவர் நான் இந்துவும் இல்லை இந்தியனும் இல்லை என்று சொன்னதாக ஊடகத்தில் செய்தி வந்தது இந்தியா என்பது என்று வந்தது? என்று ஒருவர் கேட்கிறார் இவர்களில் பலர் சினிமா படம் தயாரிக்கிறார்கள் இந்தியாவையும் அதன் இந்து கலாச்சாரத்தையும் இழித்துப்பேசுவதும், பொய்யை பரப்பி போராட்டங்களை தூண்டுவதும் இவர்களின் வேலையாக உள்ளது இந்துக்களை மதமாற்றம் செய்வதும் இவர்களின் பணிகளில் ஒன்று இவர்களும் பெரும்பாலும் மதம் மாறியிருப்பார்கள் பலர் மதம் மாறியும் அதனை காட்டிக்கொள்ளாமல் இருப்பார்கள் அப்படி காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது ஒன்று அரசின் சலுகைகளை தொடர்ந்து பெறுவதற்கு இன்னொரு காரணம் இந்து என காட்டிக்கொண்டே செயல்பட்டால்தான் சக இந்துக்கள் இவர்களின் பிரச்சாரத்தால் தங்களின் கொள்கையில் நம்பிக்கை இழந்து எழிதில் மதம் மாறுவார்கள் என்னும் நோக்கம் காட்டு யானையை பிடிக்க வளர்ப்பு யானையை பயன்படுத்துவதுபோலத்தான் இந்த யுத்தி தமிழக ஊடகங்களில் நெறியாளர்களாக உள்ளவர்கள் பலர் இந்த வகையை சார்ந்தவர்களே இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கு ஊடகம் பத்திரிக்கைகளில் வேலை வாங்கிக்கொடுத்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட வைத்துள்ளார்கள் தனிநபரோ இயக்கமோ, நாட்டுப்பற்றோடு செயல்பட்டால் அவர்கள்தான் இவர்களின் முதல் எதிரியாக இருப்பர் அந்த வகையில் பாஜக இவர்களின் முதல் எதிரியாக உள்ளது இவர்கள் பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் ஒரு குற்றவாளி இந்துவாக இருந்தால் துள்ளிக்குதிப்பார்கள், ஆனால் அதே குற்றத்தை புரிந்தவர் கிருஷ்தவராகவோ முஸ்லீமாகவோ இருந்தால் மவுனமாக இருந்து அந்த குற்றவாளிகளை ஆதரிப்பார்கள் இவர்களின் முதல் எதிரி தேசப்பக்திதான் குடிமக்கள் பதிவேடு என ஒரு பதிவேடு இல்லாத நாடு உலகத்தில் இல்லை நாட்டுக்குள் நடமாடுகிறவர்கள் நம்மவர்கள்தானா, அல்லது நாம் அனுமதித்து குடியேறியவர்தானா, அல்லது திருட்டுத்தனமாக நாட்டுக்கு எதிராக செயல்படுவதற்காக வந்திருக்கிறாரா? என பார்க்கக்கூடிய பதிவேடுதான் குடிமக்கள் பதிவேடு அப்படி ஒன்று வேண்டவே வேண்டாம் என்கிறார்கள் இவர்கள் அப்படி என்றால் இவர்கள் யார்? இம்மாதிரி நபர்களைத்தான் வரலாறு ஐந்தாம் படை என்று வர்ணிக்கிறது காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிகாலத்தில் இத்தகைய ஐந்தாம்படையைத்தான் ஊட்டி வளர்த்து விட்டிருக்கிறது இந்த ஐந்தாம்படைக்கு ஆதரவாகத்தான் காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும் திமுகவும் தமிழகத்தில் சில லட்டர்பேர்டு அமைப்புகளும் செயல் படுகின்றன இவர்களை இனம் கண்டு முறியடிக்கவேண்டியது ஒவ்வொரு தேசப்பக்தனின் கடமையாகும்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
13-ஜன-202021:08:10 IST Report Abuse
Nallavan Nallavan . மோதி -ன்ற பேரைக்கேட்டாலே அவனவன் பேண்ட்டு நனையணும் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X