கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வடமாநில பெண் பாலியல் வன்கொடுமை: 4 பேருக்கு சாகும் வரை சிறை

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020 | கருத்துகள் (102)
Advertisement

இந்த செய்தியை கேட்க

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு இளைஞர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், இந்த வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தஞ்சாவூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.


டில்லியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதற்காக டில்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த அந்த பெண், சென்னையிலிருந்து கும்பகோணத்துக்கு கடந்த 2018 ம் ஆண்டு டிச.,01ம் தேதி இரவு திருச்செந்தூர் விரைவு ரயிலில் கும்பகோணம் வந்தார். முதன்முறையாக கும்பகோணம் வந்ததால் அந்த பெண்ணுக்கு சரியான திசைகள் தெரியவில்லை. நள்ளிரவு 11 மணிக்கு மேலானதால் விடுதி அறையில் தங்குவதற்கு திட்டமிட்டு, அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறினார்.

ஆனால், ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தி, பெண் கூறிய வழியை விடுத்து வேறொரு பக்கம் சென்றதால், அப்பெண் தன் நண்பர்களுக்கு போன் செய்து விவரத்தை கூறியிருக்கிறார். இதனால் பயந்த குருமூர்த்தி, அப்பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இருட்டில் தவித்து நின்ற அவர், அந்தவழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். அதில், 2 இளைஞர்கள் இருந்தாலும், வேறுவழி இல்லாமல், அவர்களுடன் பைக்கில் ஏறி சென்றார். அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பெண்ணை வலுகட்டாயமாக இழுத்து சென்று, கொலை மிரட்டம் விடுத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், தன் நண்பர்கள் இருவரையும் வரவழைத்து அவர்களும் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், அதில் ஒரு இளைஞர் அப்பெண்ணை வேறொரு ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது, ஆட்டோ ஓட்டுநரிடம் போனை வாங்கிய அந்த இளைஞர், தன் நண்பர்களுக்கு கால் செய்து, பாதியில் இறங்கி சென்றுள்ளார். பின்னர், விடுதியில் இறங்கிய அப்பெண், அந்த ஆட்டோ பதிவு எண்ணை குறித்து வைத்து தன் தோழிகளுக்கு விவரத்தை கூறியுள்ளார். அவர் மூலம் பெண்ணின் பெற்றோர் மற்றும் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் தெரிந்து, அவர்கள் கும்பகோணம் வந்தனர்.

வங்கி நிர்வாகம் அளித்த புகாரில் விசாரணையை தொடங்கிய போலீசார், நடந்தவற்றை கூறிய அந்த பெண், ஆட்டோ பதிவு எண்ணை கூறியுள்ளார். அதை வைத்து ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரிக்கையில், தன்னிடம் போன் வாங்கி பேசினார் ஆனால் யாருக்கு பேசினார் என தெரியவில்லை என குறிப்பிட்டார். அந்த போனில் இருந்து சென்ற போன் எண்ணைக்கொண்டு விசாரணையை துரிதப்படுத்தியதில், அவர்கள், கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகர் சுப்பிரமணியன் மகன் தினேஷ் (26), மோதிலால் தெரு மூர்த்தி மகன் வசந்த்குமார் (23), மூப்பனார் நகர் சிவாஜி மகன் புருஷோத்தமன் (21), ஹலிமா நகர் சுந்தர்ராஜன் மகன் அன்பரசன் (21) என்பது தெரியவந்தது.


தீர்ப்பு


இதனையடுத்து கும்பகோணம் மேற்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் நான்கு பேரையும் கைது செய்தார். மேலும், நடுவழியில் இறக்கிவிட்ட ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தியையும் கைது செய்து முதல் குற்றவாளியாக பதிவு செய்தார். இந்த வழக்கு தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. போலீஸார் 700 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அரசு தரப்பு சாட்சியாக 33 பேர் விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், அரசு தரப்பு சாட்சியங்கள் சந்தேகம் இன்றி நிரூபனம் செய்யப்பட்டுள்ளதால் 5 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும், பலாத்காரம் செய்த நான்கு பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனையும், நால்வருக்கும் தலா ரூ.65 ஆயிரம் அபராதமும் விதித்தும், ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
18-ஜன-202021:38:56 IST Report Abuse
Krishnamurthy Venkatesan சரியான படிப்பு இல்லை அதனால் வேலை இல்லை, அப்பன் ஆத்தா பேச்சை கேட்பதில்லை, போதை, கஞ்சா வக்கிர உணர்வுகளை தூண்டும் CD க்கள். இந்த வங்கியின் மேலாளருக்கு இந்த நிகழ்ச்சியில் எந்த பொறுப்பும் இல்லையா? ரயில்வே ஸ்டேஷனில் பலர் இருக்கும் வெயிட்டிங் ஹால் இருக்கிறது, ஹிந்தி பேசத்தெறிந்த ஸ்டேஷன் மாஸ்டர் இருந்திருக்கிறார். ஆன்லைன் (இன்டர்நெட் )பயன்படுத்த தெரியும் என்ற கர்வம் அந்த பெண்ணிடம் தவறான தைரியததை கொடுத்திருக்கிறது. இளைஞர்களை நல்வழிப்படுத்த அரசும், மகான்களும், அரசியல்வாதிகளும் முயற்சி செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜன-202015:26:33 IST Report Abuse
Lion Drsekar பாவம் வாசகர்கள், சட்டம் அறியாதவர்கள்,அறிந்தாலும் அறியாமல் இருப்பவர்கள் நன்னடத்தை, தலைவர்கள் பிறந்தநாள் எல்லாம் இருக்கிறது, இவர்கள் வெளியே வந்து மக்களுக்கு நன்மைகள் செய்ய முக்கிய பதவியில் அமர்ந்தாலும் அமர்வார்கள், இதுதான் நாம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
19-ஜன-202021:28:32 IST Report Abuse
Anandanஇவனுங்களுக்காவது சாகும் வரை சிறைத்தண்டனை, உபியில் ஒரு MLA இதே செயல் கூட பல கொலைகள் அவருக்கு ஆயுள் தண்டனை அப்போது மருத்துவர் உறக்கத்தில் இருந்தார்....
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
19-ஜன-202021:29:30 IST Report Abuse
Anandanநீங்கதான் விவரம் தெரிந்தவராயிற்றே, உபி MLA விஷயத்தில் கருத்தே சொல்லக்காணோம். அதுக்கு பெயர்தான் நாட்டுப்பற்றா. நாட்டிற்கு கேடு அல்லவா....
Rate this:
Share this comment
Cancel
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
16-ஜன-202008:30:02 IST Report Abuse
Kalaiselvan Periasamy மிக மட்டமான தீர்ப்பு. இந்த நால்வரையும் தூக்கில் போட்டு இருக்க வேண்டும் . இது தான் தமிழ் நாடு . குற்றம் செய்தவன் தமிழனாக இருந்தால் அவனுக்கு உதவி செய்து தப்பிக்க வைக்க படுவான் . விரைவில் இந்த காமுகர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுதலையாக காரணம் தேடுவார்கள் சில அற்ப தமிழர்கள் . தரமான தமிழன் தமிழ் நாட்டில் உண்டா ?
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
19-ஜன-202021:30:07 IST Report Abuse
Anandanதம்பிக்கு உபி MLA வழக்கின் தீர்ப்பு தெரியாது போல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X